27.6.16

பிட்காயின் சம்பாரிக்க என்ன தேவை?

பிட்காயின் சம்பாரிக்க என்ன தேவை

பிட்காயின் ஒரு உண்மையான பணம் தான், ஆனால் இது டிஜிட்டல் மணி "Digital Money". இதை உடனே சேகரியுங்கள்.


1 பிட்காயின் = 55000 ரூபாய்

1 பிட்காயின் = 650 டாலர்

1 BTC = $650 approx

எவ்வாறு பிட்காயினை சம்பாரிப்பது ?

மிகவும் எளிது, கனிணி, இன்டெர்னெட் இருந்தால் போதும். முதலில் இலவச‌ BitCoin சேமிப்பு அக்கவுண்டை திறவுங்கள், இந்த அக்கவுண்ட் உங்கள் வங்கி கணக்கு போலவே இருக்கும். பின் இலவசமாக பிட்காயின்களை வழங்கும் இணைய தளங்களுக்கு சென்று உங்கள் வாலட் அட்டரஸ் அதாவது உங்கள் BitCoin அக்கவுண்ட நம்பர் செலுத்தி பெறுங்கள். மிகவும் சுலபம் தான். 

படி 1: உங்கள் புதிய BitCoin அக்கவுண்ட்டை XAPO தளத்தில் நீங்கள் இலவசமாக திறந்து கொள்ளலாம்.  Xapo.com Wallet - இதில் உங்களின் உண்மைமையான அடயாளத்தை தர வேண்டும், ஐடென்டிடி புரூப் கேட்பார்கள். இதில் பிட்காயின் "Debit Card" டிபிட் கார்ட் வசதி உண்டு ஆதலால் அன்லைன் சாப்பிங் பிட்காயின் பயன்படுத்தி செய்யலாம்.
"WALLET" என்றால் பிட்காயின் வங்கி கணக்கு என்று பொருள் கொள்ளவும். அதில் கொடுக்கபடும் அட்டரஸ் தான் பிட்காயின் அக்கவுண்ட் நம்பர்.

படி 2:பிட்காயினை இலவசமாக தரும் இனையதளங்களுக்கு Faucets என்று பெயர். இந்த இனையதளங்களின் பட்டியல் இனி வரும் பதிவுகளில் கொடுக்கப்படும்.

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

வீட்டில் இருந்தபடியே இணையத்தளத்தின் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 'ஐந்தாயிரம் கட்டினால் மாதம் ஐம்பதாயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம் என்ற உள்ளூர் விளம்பரங்கள் தொடங்கி, டாலர்களில் பணத்தை இணைத்தளத்தில் செலுத்தச் சொல்லும் பன்னாட்டு விளம்பரம் வரை ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்களை எங்கெங்கும் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையிலேயே இணைத்தளத்தின் மூலம் சுலபமாகச் சம்பாதிக்க முடியுமா? முடியுமெனில், எப்படி? எங்கிருந்து தொடங்குவது என்பதில்தான் பலருக்கும் குழப்பம். இந்த விஷயத்தில் பொதுவாக இரண்டு விதமான மாயைகள் நிலவுகின்றன. ஒன்று 'அடிப்படைக் கணிணி அறிவை மட்டும் வைத்துக்கொண்டு நம்மாலெல்லாம் இணைத்தளத்தில் சம்பாதிக்கவே இயலாது' என்று தீர்மானிப்பது. இரண்டு 'விளம்பரங்களில் வருவது போல் பலருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, விளம்பரங்களைச் சொடுக்குவது போன்றவை மூலமாகவே சுலபமாக ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று நம்புவது'. இவை இரண்டுமே இரண்டு துருவத்தைச் சேர்ந்தவை.

இணையத்தின் மூலம் கண்டிப்பாகப் பணத்தைச் சம்பாதிக்க முடியும். இதில் சந்தேகமே இல்லை. இதற்கு கணிணியில் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டும் என்ற தேவையுமில்லை. அதே சமயம் அது பணங்காய்ச்சி மரத்தினை உலுக்கிப் பணத்தை எடுத்துவருவது போல் மிகச் சுலபம் என விளம்பரங்கள் சொல்வதும் வடிகட்டின பொய்தான்.

முதலில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். Easy Money என்று எதுவும் கிடையாது. உழைப்பில்லாமல் சம்பாதிப்பது என்பது கனவில் மட்டுமே நடக்க முடியும். நேர்மையாக, நாணயமாக ஆனால் உழைப்பின்றிப் பணத்தைச் சம்பாதிப்பது என்பது இயலாது. அதுவும், இணைத்தளத்தில் நீங்கள் சம்பாதிக்கவேண்டுமெனில் விடாமுயற்சியும் பொறுமையும் அவசியம். நீங்கள் கணிணித் தொழில்நுட்ப வல்லுனராக இருந்தால், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் செலவிட்டால் ஒருவேளை போதுமானதாக இருக்கக் கூடும். சாதாரணமான 'கணக்கியல்', 'Data Entry' பணிகள், வலைத்தளபராமரிப்புப் பணிகள் இவற்றைச் செய்பவரானால், தொடர்ச்சியாகப் பணி செய்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும்.

ஆயினும், நீங்கள் உண்மையான ஆர்வத்தோடும், அக்கறையோடும் உழைத்தால், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில்கூட சம்பாதிக்கலாம். சொல்லப்போனால், மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் உங்கள் நண்பரை விடக்கூட அதிகமாகவே உங்களால் சம்பாதிக்க முடியும். அதற்கு வழிகாட்டுவதுதான் இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.

இணையத்தில் சம்பாதிக்க என்னென்ன தேவை? ஏதாவது நிறுவனத்திற்குப் பணம் கட்டி ஆலோசனை பெறவேண்டுமா? கண்டிப்பாகத் தேவையில்லை. இவ்வளவு பணம் அனுப்புங்கள்... நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க நாங்கள் கற்றுத்தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் நல்ல,விரைவாகப்பணியாற்றும் ஒரு கணிப்பொறி, இணைத்தள இணைப்பு, அடிப்படைக்கணிணி அறிவு, கற்றுக்கொள்ளும் ஆர்வம், கொஞ்சம் பொறுமை, நிறைய அக்கறை, கடின உழைப்பு இவைதான். இவையெல்லாம் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது நாம் மேற்கொண்டு செல்லலாம்.

இணைத்தளத்தின் மூலமாகச் சம்பாதிப்பதில் என்னென்ன வசதிகள்?

ஒன்று: சுதந்திரம் - நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி. விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில் இருந்து பணி செய்யலாம். போக்குவரத்து அலைச்சல் இல்லை. வெளியூருக்குச் சென்றிருந்தாலும், உள்ளூரில் இருந்தாலும் தடைப்படாமல் வேலை செய்யலாம்.

இரண்டு : வருமானம் - இவ்வளவுதான் சம்பளம், இவ்வளவு நேரம்தான் வேலை என்பது இல்லை. உங்கள் சம்பாத்தியத்தை நீங்களே தீர்மானிக்க முடியும். உடல் நலமும் உற்சாகமும் ஊக்கமும் இருந்தால் உங்கள் வருமானத்தில் எல்லையும் விரிந்துகொண்டே போகும். உங்கள் திறமை, ஒதுக்கும் நேரம், உழைப்பு, கற்றுக்கொள்ளும் வேகம் இவற்றைப் பொறுத்து உங்கள் வருமானமும் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்.

மூன்று: அபாயமின்மை: சொந்தமாக நீங்கள் ஒரு தொழில் தொடங்கினால், அதில் எத்தனையோ அபாயங்கள் உண்டு. சிக்கல்களும் உண்டு. நீங்கள் முதல் போடவேண்டும். தொழில் தொடங்க அனுமதி வாங்கவேண்டும். சந்தைப்படுத்துதல், உற்பத்தி செய்தல் என்று பல உண்டு. நீங்களே எல்லாவற்றையும் செய்ய இயலாது என்பதால் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நட்டமேற்பட்டாலோ, கடனாளியாகிவிட நேரும் அபாயம் உண்டு. இணைத்தளம் மூலம் தொழிலில் இறங்குகையில் குறைவான பணம் போதுமானது.

நான்கு: வளரும் தேவை: இணைத்தள சந்தை வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பலதரப்பட்ட பொருட்களும் இணைத்தளத்தில் விற்பனை ஆகின்றன. மக்கள் நீண்ட தூரம் சென்று அலைந்து திரிந்து வாங்குவதை விட, இணைத்தளத்தின் மூலம் வாங்குவது வசதியானது, எளிமையானது என்று கருதத் தொடங்கிவிட்டனர். பல நிறுவனங்களும், வேலைக்கு ஆள் எடுப்பதை விட, சுயேச்சையாக இணைத்தளத்தில் பணிபுரிபவர்களிடம் வேலையைக்கொடுப்பது லாபகரமானது என்று எண்ணுகிறார்கள். இதனால், சந்தைப்படுத்துதல், கணிணிப்பணிகளுக்கான வேலை வாய்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.

ஐந்து: கற்றலில் எளிமை: நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டுமெனில் படிப்புக்கான சான்றிதழ்கள் வேண்டும். ஒரு கணக்கியல் துறையில் பணி வேண்டுமென்றால் அதற்குப் படித்திருக்கவேண்டும். ஆனால், இணைத்தளத்தில் கற்றுக்கொள்வதும் எளிது, உங்களுக்குப் பணி கொடுப்பவர்களும் உங்கள் வேலைத்திறனைப் பார்ப்பார்களே தவிர தகுதிச் சான்றிதழ் கேட்க மாட்டார்கள். சராசரித் திறனும், கற்பதில் விருப்பமும் உள்ள என் நண்பர், (இணைத்தளத்தினை மின்னஞ்சல் பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தவர்) ஓரிரு வருடங்களாக வலைப்பணி புரிகிறார். மென்பொருள் நுட்பம் எதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால் இன்று இணைத்தள நிர்மாணங்கள், பராமரிப்பு இவற்றின் மூலமாக மாதம் பல ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இது மிகைப்படுத்தப் பட்டதில்லை. உண்மையான உண்மை.

ஆறு: அதிக வேலை வாய்ப்பு: நீங்கள் விற்பனையாளராக இருந்தால், உலகத்தில் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருளை விற்பனை செய்யலாம்.பணி புரிபவராக இருந்தால், எந்த நாட்டில் இருப்பவருக்காகவும் பணி புரியலாம். உங்கள் வட்டம் விரிவடைவதால் வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை.

ஏழு: ஒரே விதமான வேலையை சலிப்படையும் வரை திரும்பத்திரும்பச் செய்யவேண்டுவதில்லை. அதே போல், பணம் சம்பாதிக்க ஒரே ஒரு வழி முறையைப் பயன்படுத்தவேண்டியதும் இல்லை. இணையத்தில் நேர்மையாகப் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. (தொடரும் கட்டுரைகளில் நாம் ஒவ்வொன்று பற்றியும் விரிவாகக் காணலாம்). இதனால் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் பெருகுகின்றன.

இணைத்தளத்தில் சம்பாதிக்கும் வழிகள் பலவற்றைப்பற்றியும், இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.http://ahamathulla.blogspot.com

பிட்காயின் என்றால் என்ன?

81bdb4d917cfff402ddde2403b6d3104
பிட்காயின் (bitcoin) என்பது சடோஷி நகமோட்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயமுறை ஆகும். இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. சரியிணை வலைப்பின்னல் முறையில் இது இயங்குகிறது.
பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி, பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.
அடையாளம் காட்டாதவர் கூட பிட்காயினைப் பயன்படுத்த முடியும். பிட்காயின்களை தனிப்பட்ட கணிணிகளிலோ அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். எப்படியாக இருந்தாலும் பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இணையம்மூலம் பணத்தை அனுப்பலாம். எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட்காயின்களை உருவாக்கி யாரும்பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.
பிட்காயின் என்றால் என்ன? 
ஒரு சரியிணை வலைப்பின்னல் (பியர் - பியர்) மின்னணு பண அமைப்பு.
பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வடிவ நாணயம். யாரும் அதை கட்டுப்படுத்துவதில்லை. பணம் மற்றும் நாணயம் போல அச்சிடப்படுவது இல்லை. கணித சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய ஒரு மென்பொருள் மூலம் மக்களால், அதிகரிக்கும் தொழில் வளர்ச்சியால், உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது.
க்ரிப்டோகரன்சி எனப்படும் வளர்ந்துவரும் புதியவகை பணத்திற்கு (மறை பணம்) இதுவே முதல் உதாரணம்.
சாதாரண நாணயங்களில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? 
மின்னணு முறையில் பொருட்களை வாங்க பிட்காயின் பயன்படும். அந்த வகையில், இது டாலர், யூரொ,ரூபாய் போன்ற நாணயம், மின்னணு முறையிலும் வர்த்தகம் செய்ய உதவும்.
எனினும், வழக்கமான நாணயங்களிலிருந்து பிட்காயின் வேறுபட்டு விளங்க இன்னொரு முக்கிய பண்பு இது பரவலாக்கப்பட்டுள்ளது என்பதுதான். எந்த ஒரு நிறுவனமும் பிட்காயினை கட்டுப்படுத்துவது இல்லை. இது சிலருக்கு வசதியாக இருக்கிறது, ஏனெனில் அவர்களது பெருமளவிலான பணத்தை வங்கிகளாலும் கட்டுப்படுத்த முடியாது. 
இதை உருவாக்கியது யார்? 
முதல் பிட்காயின் விவரக்குறிப்பு மற்றும் மாதிரி வடிவம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, பின்பு 2010-ம் ஆண்டு மென்பொருள் வெளியானது. தன்னைப் பற்றி தகவல் வெளியிடாத ஒருவரால் சடோஷி நகமோட்டா என்ற புனைபெயருடன் இம்மென்பொருள் வெளிவந்தது. அன்று முதல் இந்த பிட்காயின் சமூகம் அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.
இதை அச்சிடுவது யார்? 
யாரும் இல்லை. இந்த நாணயம் எந்த ஒரு வங்கியாலும் யாருக்கும் தெரியாமல் அச்சிடப்பட்டு, மக்களிடம் புழக்கத்திற்கு வராமல், தனக்கான விதிகளை அமைத்து கொள்வதில்லை. வங்கிகள் தங்களது நாட்டின் கடன் சுமையை குறைக்க தொடர்ந்து நாணயங்களையும், பணத்தையும் அச்சிடுகின்றன, அது அந்நாட்டு பணத்தின் மதிப்பை குறைக்கவே செய்யும்.
மாறாக, பிட்காயின் மின்னணு முறையில் குறிப்பிட்ட குழுவால் தயாரிக்கப்படுகிறது. அக்குழுவில் யார்வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். பிட்காயின், விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னலில் (distributed network) உள்ள கணினியின் திறன்கொண்டு "வெட்டி" எடுக்கப்படுகின்றது.
மறைபணம் (virtual currency) கொண்டு இந்த வலைப்பின்னலானது பல பரிவர்த்தனைகளை செய்வதன் மூலம் பிட்காயின் தனது சொந்த கட்டண வலைப்பின்னலை திறம்பட உருவாக்கி வருகிறது.
நீங்கள் வரம்பற்ற பிட்காயின்களைக் கடைந்தெடுக்க முடியாது
ஆம், பிட்காயின் நெறிமுறை (protocol) - பிட்காயின்களை செயல்படுத்தும் விதிகள் - 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இவை சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (அதாவது ஒவ்வொரு பிட்காயினை 0.00000001 பகுதிகளாகப் பிரித்துள்ளனர்) இந்த ஒரு பகுதியானது "சடோஷி" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பிட்காயின் எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது? 
வழக்கமான பணம் தங்கம் அல்லது வெள்ளியின் அடிப்படையில் தயாரிக்கப்படும். கோட்பாட்டளவில், பணத்தை வங்கிகளில் செலுத்தி தங்கமோ, வெள்ளியோ பெற்றுக்கொள்ளலாம் (இது நடைமுறையில் இல்லை) ஆனால் பிட்காயின் தங்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை, மாறாக கணிதத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
பிட்காயின் தயாரிக்க உதவும் கணித வாய்ப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்களை உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கணித வாய்ப்பாடு இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது, யார்வேண்டுமானாலும் பார்க்கலாம்.
திறந்த மூல மென்பொருள் (open source software) ஆதலால் யார்வேண்டுமானாலும் இதன் செயல்பாட்டை சரிபார்க்க முடியும்.
இதன் பண்புகள் எவை? 
அரசாங்க ஆதரவுடன் வெளிவரும் நாணயங்களை விட பிட்காயின் பல முகன்மை வசதிகளைக் கொண்டுள்ளது.
1. பரவலாக்கப்பட்டது
பிட்காயின் பரவலாக்கப்பட்ட ஒன்று. எந்த ஒரு வங்கி, அரசு, நிறுவனம் அல்லது தனிநபர் கட்டுப்பாட்டிலும் இது இல்லை. அதாவது, உங்களது கணக்கை யாராலும் முடக்க முடியாது, அரசாங்கம் இதன் மதிப்பைக் குறைக்க முடியாது, அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம், மற்றும் அச்சுறுத்தும் விதமாக, இந்த நாணயங்கள் யாரிடம் எவ்வளவு இருக்கின்றன என்பது தெரியாததால் வரி ஏய்ப்பு நடக்கும் சூழல் உருவாகும்.
2. கணக்கு துவங்குவது எளிது
வழக்கமான வங்கிகள் சாதாரண வங்கி கணக்கு தொடங்க பல்வேறு வளையங்களைத் தாண்டி குதிக்கச் செய்யும். வணிக கணக்கு துவங்குவது என்பது மேலும் நகைப்பபூட்டும் நடைமுறை, அதிகாரத்துவம் சூழப்பட்டிருக்கிறது. ஆனால் பிட்காயின் கணக்கு துவங்குவது எளிது, எந்த கேள்வியும் இல்லை, பணமும் செலுத்தத் தேவையில்லை.
3. அடையாளம் அற்றது
நல்லது. பயனாளர்கள் வெவ்வேறு பிட்காயின் முகவரிகளை வைத்துக்கொள்ளலாம். பெயர், முகவரி இதர தகவல்களுடன் ஒருபோது பிட்காயின் இணைக்கப்பட போவதில்லை. எனினும்...
4. முற்றிலும் வெளிப்படையானது
...வலைப்பின்னலில் (நெட்வொர்க்கில்) நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் பிட்காயின் ஒரு பேரேட்டில் பதித்து வைக்கிறது. அப்பேரேட்டின் பெயர் ப்ளாக்செயின் (blockchain). அது அனைத்தையும் சொல்லிவிடும்.
உங்களிடம் பொதுவில் பயன்படுத்திய பிட்காயின் முகவரி இருப்பின், அதில் எவ்வளவு பிட்காயின்கள் இருக்கின்றன என்பதை அனைவராலும் சொல்ல முடியும், ஆனால் அது உங்களுடையது என்பதை அவர்களால் கண்டறிய முடியாது. 
ஒரே பிட்காயின் முகவரியை அடிக்கடி பயன்படுத்தாமலும், அதிக பிட்காயின்களை ஒரே முகவரிக்கு அனுப்பாமலும் மறைமுகமான மற்றும் பாதுகாப்பான செயல்களை பிட்காயின் நெட்வொர்க்கில் பயனாளர்கள் மேற்கொள்ளலாம்.
5. பரிவர்த்தனை கட்டணம் மிகக்குறைவு
அயல் நாடுகளுக்கு பணம் அனுப்பவேண்டுமேன்றால் உங்கள் வங்கி உங்களிடம் குறைந்தது 10 யூரோ பெறலாம். பிட்காயினில் அது இல்லை.
6. வேகமானது
உலகின் எந்த மூலையிலிருந்து பிட்காயின் அனுப்பினாலும், பிட்காயின் நெட்வொர்க் பரிவர்த்தனையை செயல்படுத்திய அடுத்த ஒரு நிமிடத்தில் அது உங்களிடம் வந்து சேரும்.
பிரபலமான கருத்துகள் 
"பிட்காயினின் மிகப் பெரிய விசிறி நான். பணம் வழங்கலில் உள்ள கட்டுப்பாடுகள் அரசியலிற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்."
அல் கோரே [Al Gore], அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி & அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
"பிட்காயின் ஒரு தொழில்நுட்ப வெற்றி."
பில் கேட்ஸ் [Bill Gates], மைக்ரோசாப்ட் - இணை நிறுவனர்.
"கற்றறிந்தோர் அனைவரும் பிட்காயின் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ஏனெனில் உலகின் முக்கிய வளர்சிகளில் ஒன்றாக பிட்காயின் இருக்கக்கூடும்."
- லியன் லூ [Leon Louw], அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டவர்.